தூத்துக்குடி : போராட்டத்தை அடுத்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம் செய்யப்பட்டது. சுங்கக் கட்டணம் வசூல் செய்ய கோர்ட் விதித்த தடை உத்தரவு நகல் தரப்பட்டதை அடுத்து நிறுத்தம் செய்யப்பட்டது. நகல் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கோர்ட் உத்தரவை அமல்படுத்தக் கோரி லாரி உரிமையாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் நிறுத்தம்!1
0