தூத்துக்குடி : தூத்துக்குடியில் ரூ.35 கோடி செலவில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 776 மீட்டர் குழாய் கடலோர ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளுக்குள் வருவதால் அனுமதி அளிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் விண்ணப்பம் அளித்தது. விண்ணப்பத்தை பரிசீலித்த தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்த உடன் விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூத்துக்குடியில் குழாய் மூலம் வீடு, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்ய திட்டம்
0