அங்காரா: துருக்கியில் கடந்த வாரம் நடந்த அதிபர் தேர்தலில் எர்டோகன்(69) வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் அதிபராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அவர் பதவி பிரமாணம் செய்துகொண்டார். பின்னர் தனது அரண்மனை வளாகத்தில் விழாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு துருக்கியின் அதிபராக அவர் பொறுப்பேற்றார். நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் மற்றும் ஸ்வீடன் முன்னாள் பிரதமர் உள்பட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
3வது முறையாக துருக்கி அதிபராக எர்டோகன் பதவியேற்பு
previous post