இஸ்தான்புல்: துருக்கியில் மூன்று முக்கிய நகரங்களின் மேயர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்தான்புல் மேயர் எக்ரெம் இமாமோக்லு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மேலும் மூன்று முக்கிய நகரங்களின் மேயர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அடியமான் மேயர் அப்துர்ரஹ்மான் துட்டேரே, அதானா நகராட்சி தலைவர் ஜைதன் கராலார் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இதேபோல் அன்டால்யாவின் மேயர் முஹிட்டின் போசெக் இரண்டு சந்தேக நபர்களுடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துருக்கியில் 3 மேயர்கள் கைது
0