துருக்கி: தனது 6 வயது மகன் புற்றுநோயில் இருந்து மீண்டதைக் கொண்டாட வருமாறு சமூகவலைதளத்தில் பதிவிட்ட தந்தையின் அழைப்பை ஏற்று 1000க்கும் மேற்பட்டோர் கையில் பலூனுடன் ஒன்று கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இஸ்தான்புல்லை சேர்ந்த ஒருவர் தனது 3 வயது மகன் ரத்த புற்றுநோயில் இருந்து குணமடைந்ததை வானில் வண்ண பலூன்களை பறக்கவிட்டு கொண்டாட இருப்பதாகவும், ஆனால் எங்களுக்கு நண்பர்கள் என யாரும் கிடையாது. எனது மகனுக்காக நீங்கள் பலூனை பறக்கவிடுவீர்களா? என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவரது இந்த பதிவுகள் துருக்கி முழுவதும் பரவி வைரலானது. இந்நிலையில், அந்த சிறுவனுக்காக இஸ்தான்புல்லில் ஒரேநேரத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு, அந்த நகரத்தையே ஸ்தம்பிக்க வைத்தனர். புற்றுநோய் பாதித்து குணமடைந்த சிறுவனின் தந்தையின் வார்த்தைக்காக பலரும் ஒன்று திரண்டு, பலூனை பறக்கவிட்டு, சிறுவனை வாழ்த்தினர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது. இந்நிகழ்வில் புற்றுநோய் பாதித்த பலரும் பங்கேற்றனர்.