மதுரை: டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க அளிக்கப்பட்ட அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைப்பதற்கு ஒன்றிய அரசு வேதாந்தாவின் கிளை நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக மேலூர் முழுவதுமாக உள்ள கடைகளை வணிகர்கள் அடைந்திருக்கிறார்கள். மூடப்பட்ட 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகளில் கருப்பு கொடிகளை ஏற்றி உள்ள அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.