பாரா ஒலிம்பிக்கில் முதலில் நடந்த பேட்மின்டன் போட்டியில் இந்தியர்கள் நேற்று களமிறங்கினர். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நிதிஷ்குமார், துளசிமதி முருகேன்(தமிழ்நாடு) இணை 21-14, 21-17 என நேர் செட்களில் இந்திய இணையான யதிராஜ்/பாலக் ஆகியோரை வென்றனர். அதேபோல் பெண்கள் ஒற்றையர் பிரிவில் துளசிமதி முருகேசன் 21-9, 21-11 என நேர் செட்களில் இத்தாலி வீராங்கனை ரோசா மார்கோவை சாய்த்தார்.
கூடவே இந்தியாவின் தருண், பாலக் சுகந்த் கடம், நிதிஷ் குமார், யதிராஜ், ஆகியோரும் அடுத்தச் சுற்றுக்கு நேற்று முன்னேறினர். பெண்களுக்கான ஒற்றையர்(எஸ்எல்3) பிரிவில் மானசி ஜோஷி, மன்தீப் கவுர், கலப்பு இரட்டையர்(எஸ்எச்6) பிரிவில் களம் கண்ட சோலைமலை சிவராஜன்/நித்யஸ்ரீ சுமதி சிவன் ஆகியோர் ஏமாற்றமளித்தனர்.