காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக அலுவலகத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் மத்திய காசநோய் பிரிவு, மாவட்ட காசநோய் அலுவலகம் மற்றும் துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) ஆகியவை சார்பில் கோட்ட கண் காணிப்பாளர் அருள்தாஸ் தலைமையில், காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் வளாகத்தில் நடமாடும் நுண்கதிர் வாகனம் மூலம் காசநோய் மார்பு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில், 100க்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) காளீஸ்வரி ஒருங்கிணைப்பாளர்கள் நலக்கல்வியாளர் பாபு சுதந்திரநாத், இராஜி, ரகுபதி மற்றும் குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை காஞ்சிபுரம் தலைமை அஞ்சலக மக்கள் தொடர்பு அலுவலர் பாலாஜி, கோட்ட அலுவலக ஊழியர் ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.
காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
0