சென்னை: மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: அந்நியர்களிடம் அடிமையாய் இருந்து வாழ்வதை விட சண்டையிட்டு சாவது மேல் என வீரப்போர் புரிந்த மாமன்னர் பூலித்தேவனின் முதன்மை படைத்தளபதி மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு நாள் இன்று. தன் நாட்டின் விடுதலைக்காக தனது கடைசி மூச்சுவரை களத்தில் நின்று ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு உயிர்நீத்த மாவீரர் ஒண்டிவீரனின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றி வணங்கிடுவோம்’ என்று கூறப்பட்டுள்ளது.