புவனேஸ்வர்: அமெரிக்காவுக்கு வருமாறு அழைத்த டிரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று பீகார் மற்றும் ஒடிசாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஒடிசாவில் பா.ஜ ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று ரூ.18 ஆயிரம் ேகாடிக்கு மேல் நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, புவனேஸ்வரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது,’ நான் ஜி 7 உச்சிமாநாட்டிற்காக கனடாவில் இருந்தபோது அமெரிக்க அதிபர் டிரம்ப் என்னை அழைத்து, மதிய உணவிற்கு அமெரிக்கா வரும்படி அழைத்தார்.
நான் அவருக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்தேன். ஆனால் ஜெகநாதரின் பூமியான ஒடிசாவிற்கு நான் செல்ல வேண்டும் என்று கூறி நான் அவரது அழைப்பை பணிவுடன் நிராகரித்தேன்’ என்றார்.