தைபே: அமெரிக்க பொருட்கள் மீது மற்ற விதிக்கும் அதே அளவு இறக்குமதி வரியை விதிக்க பரஸ்பர வரி முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். அந்த வகையில் தைவானுக்கு 32 சதவீத கூடுதல் வரியும், 10 சதவீத அடிப்படை வரியும் விதிக்கப்பட்டது. தற்காலிகமாக இந்த வரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இயற்கை வளத்திற்கான எம்பிக்கள் குழு தைவான் வந்துள்ளது.
அவர்களை வரவேற்று தைவான் அதிபர் லாய் சிங் டே அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறையை சரி செய்ய இயற்கை எரிவாயு, எண்ணெய், ஆயுதங்கள், விவசாய பொருட்கள் உள்ளிட்ட கூடுதல் அமெரிக்க பொருட்களை வாங்க முடிவு செய்துள்ளோம்’’ என்றார். தைவானை சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக சொந்தம் கொண்டாடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தைவான், அமெரிக்காவின் ஆதரவை பெரிதும் நம்பிஇருப்பது குறிப்பிடத்தக்கது.