அமெரிக்கா: டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் முக்கிய அமைப்பாக DOGE அமைப்பு செயல்படுகிறது. DOGE அமைப்பு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் இயங்கி வந்த நிலையில் திடீரென்று விலகினார். ஓகியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி சார்பாக அதிபர் பதவிக்கு போட்டிப்போட்ட முக்கியமான நபர் விவேக் ராமசாமி, தமிழ்நாடு மற்றும் கேரளா பின்புலத்தை கொண்டுள்ள இவர் அதிபராக வேண்டும் என பல கோடி இந்தியர்கள் அப்போது ஆசைப்பட்டனர். ஆனால் இறுதி போட்டியில் விவேக் ராமசாமி விலகி டொனால்டு டிரம்ப்-க்கு வழிவிட்டார்.
இந்த நிலையில் விவேக் ராமசாமி துணை அதிபராக போட்டிப்போடுவார் என பேசப்பட்டது, ஆனால் அதுவும் சில நாட்களிலேயே ஜேடி வேன்ஸ்-க்கு கொடுக்கப்பட்டது. தேர்தலில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வெற்றிப்பெற்ற நிலையில் விவேக் ராமசாமி-க்கு முக்கிய பதவி கொடுக்கப்படும் என பேச்சு நிலவியது ஆனால் டிரம்ப் அவருக்கு நேரடி அரசு பதவி கொடுக்காமல் DOGE அமைப்பின் பொறுப்பை கொடுத்தார்.
அமெரிக்க அரசின் நிர்வாகத்தையும் திறன்பட மேம்படுத்தும் முக்கியமான அமைப்பாக DOGE செயல்படுகிறது, இந்த அமைப்பு அரசின் செலவுகளை குறைக்கும் முக்கிய அமைப்பாக இருக்கும் என டிரம்ப் அறிவித்தார். இந்த அமைப்பு விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
எலான் மஸ்க் உடன் இணைந்து அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE அமைப்பின் இணைத் தலைவராக இருக்கும் விவேக் ராமசாமி, அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்பட்ட நிலையில் நேற்று பதவியில் இருந்து விளக்கினார். ஓஹியோ கவர்னருக்கான பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான அவரது திட்டங்களே காரணம். இதன் மூலம் டோஜ் அமைப்பின் தலைவராக எலான் மஸ்க் மட்டும் தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது