பாட்னா: பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று மாதேபுராவில் இருந்து பாட்னாவுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது, நள்ளிரவு சுமார் 12-30 மணியளவில் கொரோல் அருகே பாட்னா-முசாபர்பூர் தேசிய நெடுஞ்சாலையில் தேநீர் இடைவேளைக்காக தேஜஸ்வியின் கான்வாய் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வழியாக வந்த லாரி ஒன்று கான்வாய் மீது பயங்கரமாக மோதியது. விபத்து ஏற்படுத்திய லாரி அங்கு நிற்காமல் தப்பிச்சென்றது. லாரி தேஜஸ்வி இருந்த காரின்மீது மோதாததால் அவர் உயிர்த்தப்பினார். இந்த விபத்தில் பாதுகாவலர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லாரி மோதல்: தேஜஸ்வி யாதவ் தப்பினார்: 3 பாதுகாவலர்கள் காயம்
0