டிரையம்ப் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட ஸ்பீடு டி4 மோட்டார் சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. ஸ்பீடு 400 மோட்டார் சைக்கிள் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இதில், 398.15 சிசி, லிக்விட் கூல்டு, 4 வால்வு டிஓஎச்சி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் மற்றும் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 31 எச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் எல்சிடி ஸ்கிரீன், டூயல் சானல் ஏபிஎஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
இந்த பைக் தற்போது பியர்ல் மெட்டாலிக் வண்ணத்துடன் இணைந்த டூயல் வண்ணங்களாக கேப்சியன் புளூ/ லாவா ரெட் கிளோஸ், பாந்தம் பிளாக் , பாந்தோம் பிளாக்/ஸ்டோர்மி கிரே ஆகிய 4 வண்ணங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஷோரூம் விலை சுமார் ரூ.1.99 லட்சம்.