ரையம்ப் நிறுவனம், புதிய வண்ணத்தில் ஸ்பீடு டி4 என்ற மோட்டார் சைக்கிளை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 398 சிசி லிக்விட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 30.6 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதில் புதிதாக ஆரஞ்ச் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் சேர்ந்து இந்த மோட்டார் சைக்கிள் தற்போது 5 வண்ணங்களில் கிடைக்கும். முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் ஷாக் அப்சர்வர், அனலாக் ஸ்பீடோமீட்டருடன் கூடிய எல்சிடி ஸ்கிரீன், டூயல் சானல் ஏபிஎஸ், யுஎஸ்பி சார்ஜிங் உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.2.05 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.