டிரையம்ப் நிறுவனம் ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ்சி மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 400 எக்ஸ்-ஐ அடிப்படையாக கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்கு அடுத்த உயர் வேரியண்டாக இது வெளிவந்துள்ளது. 400எக்ஸ்-ஐ விட புதிய பைக்கின் எடை 5 கிலோ அதிகம். 400எக்ஸ்-ல் உள்ள 398 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்டு இன்ஜின் இதில் இடம் பெற்றுள்ளது.
இது அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்-ல் 40 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்-ல் 37.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். கிராஸ் ஸ்போக் வீல்கள், டியூப்ளஸ் டயர்கள், அலுமினியம் சம்ப் கார்டு, இன்ஜின் கார்டு ஆகியவை இடம் பெற்றுள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.2.94 லட்சம் அதிகம்.