Monday, February 26, 2024
Home » மூவர் கூட்டணி திட்டத்தால் டென்ஷனாகி

மூவர் கூட்டணி திட்டத்தால் டென்ஷனாகி

by Dhanush Kumar

‘‘எல்லாம் கை கூடி வர்ற நேரத்துல டிரான்ஸ்பர் போட்டுட்டாங்களேன்னு அப்சட்ல இருக்காராமே ஸ்டார் காக்கி…’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘லோக்சபா தேர்தலையொட்டி 3 ஸ்டார் காக்கிங்கள மாவட்டம் விட்டு மாவட்டம் டிரான்ஸ்பர் போட்டுட்டு இருக்காங்க… வெயிலூர் மாவட்டத்துலயும் டிரான்ஸ்பர் போட்டாங்க. இதுல பள்ளியில தொடங்குற ஏரியாவோட 3 ஸ்டார் காக்கி ரொம்பவே அப்சட்ல இருக்காறாம். ஒரு வருஷத்துக்கு முன்னாடி கொடுக்க வேண்டியதை கொடுத்து போஸ்டிங் வாங்கி வந்தாராம். இவர் வந்த நேரம் குவாரி சேல்ஸ் இருந்திருக்குது. இதனால மணல்ல வருமானம் வரலையாம். சமீபத்துல சில மாசத்துக்கு முன்னாடித்தான் குவாரிய மூடினாங்களாம். இதனால ேஹப்பியா இருந்தாராம். அதோட, மாபியாக்கள் கிட்ட ஒன்டேக்கு ேரட் பிக்ஸ் செஞ்சாராம்.

ஆனா, ரெவின்யூ செக்சன்ல அவங்களுக்கு கட்டடம் கட்ட, அதுலயும் சிக்கல் எழுந்துச்சாம். ஒருவழியா புது வருஷத்துல கணக்க தொடங்கலாம்னு நினைச்ச நேரத்துல டிரான்ஸ்பர் தகவல் தலையில இடி மாதிரி விழுந்துச்சாம். செலவு செஞ்சி வந்த இடத்துல, வெறுங்கையோட திரும்பி போற நிலைமை ஆயிடுச்சேன்னு ரொம்ப அப்செட்ல இருக்காராம். அதேசமயம் அந்த ஸ்டேஷன்ல பழம் தின்னு கொட்டய போட்ட சில காக்கிகள் வேட்டைய தொடர தயாராகிட்டாங்கன்னு காக்கிகள் வட்டாரத்துலயே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மூவர் கூட்டணி திட்டத்தால சேலத்துக்காரருக்கு டென்ஷன் எகிறிடுச்சாமே..’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வட மாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தின் மக்களவை தொகுதியை குறி வைத்து, இலைக்கட்சி கூட்டணியில் இருந்தபோது தாமரைக்கட்சி வேலை செய்து வந்தது. ஆனால் இலைக்கட்சியுடன் கூட்டணி முறிவுக்குப் பின், ‘இந்த கூட்டணியில் தேனிக்காரர் மகன், குக்கர் கட்சிக்காரர் என யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். நாம் தொகுதியை தள்ளி விட்டு விடுவோம். நல்ல கவனிப்பு கிடைக்கும்… நாம போட்டியிட்டால் டெபாசிட் தேறுவதே கஷ்டம்’ என தாமரை கட்சியினர் கூறி வருகின்றனர். இலைக்கட்சியை பொறுத்தவரை ஏற்கனவே எம்பியாக இருந்தவர்தான், தற்போது எம்எல்ஏ ஆகவும், மாவட்ட செயலாளராகவும் உள்ளார். வேறு யாரையும் அடுத்த கட்டத்திற்கு வளர விடாததால், இப்போது எம்பி தேர்தலுக்கு போட்டியிடுவதற்கே ஆட்களை தேட வேண்டியுள்ளதாம்.

இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள தேனிக்காரர், குக்கர் கட்சி, தாமரைக்கட்சியை சேர்ந்தவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறிந்த சேலத்துக்காரருக்கு டென்ஷன் எகிறி இருக்கிறதாம். விரைவில், தகுதியான நபரை அடையாளம் காட்டும்படி மாசெவுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளார்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘லோக்சபா தேர்தல் டிரான்ஸ்பரில பணம் விளையாடி இருக்கிறதாவும் சொல்றாங்களே…’’ என சந்தேகததை கிளப்பினார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தில லோக்சபா தேர்தலையொட்டி காக்கி துறையில் பணியாற்றிய அதிகாரிகள இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாம். அதன்படி புரம் மாவட்ட காவல் சரகத்தில் மூன்று மாவட்டத்தில் இன்சுகள் இடமாற்றத்தில் மிகப்பெரிய குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாம். டிஐஜி, எஸ்பி கொண்ட கமிட்டி டிரான்ஸ்பர் பட்டியலை தயாரித்த நிலையில குளறுபடி ஏற்பட்டு, புகைச்சலை ஏற்படுத்தியிருக்காம். டிஐஜி, எஸ்பி கொண்ட கமிட்டி இந்த டிரான்ஸ்பர் பட்டியல் உத்தரவை போட்ட நிலையில், பலர் லகரத்தை எறைச்சு விங்கு பிரிவுக்கு செலவு செய்து டிரான்ஸ்பரை வாங்கிச் சென்றிருக்கிறாங்களாம். இதனால ஆத்திரமடைந்த பல இன்சுகள் உயர் அதிகாரிகளிடம் முறையீடு செய்திருக்காங்க. காவல்துறை தலைமை, லோக்சபா தேர்தல் டிரான்ஸ்பர் பட்டியலில் தனிக்கவனம் செலுத்தி கையூட்டுக்கு இடமில்லாம நேர்மையா பட்டியல் தயாரிக்கவும், குறிப்பாக புரம் மாவட்டத்துல புதுசா பதவியேற்ற டிஐஜி, எஸ்பி ஆகியோர் புதிய பட்டியலை தயாரிக்கனும்னு காக்கி துறைக்கு அதிகாரிகள் கோரிக்கை வச்சிருக்காங்களாம்..’’ என்று விளக்கினார் விக்கியானந்தா.

‘‘குளோசா இருந்தவங்கள தள்ளி வச்சிருப்பது போல நடிக்கிறாராமே இலைக்கட்சி தலைவரு’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரரு எப்பவுமே உஷாராத்தான் இருப்பாராம். ஆட்சி முடிஞ்சதும் எப்படியும் வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்ததாக கூறி விஜிலென்ஸ் போலீஸ் வீட்டுக்கு வருமுன்னு உளவு பிரிவு மூலமா அவருக்கு தெரியுமாம். இதனால சிஎம் சீட்டுல இருந்தப்போ தனக்கு நெருக்கமா இருந்தவங்களை எல்லாம் இப்போ தள்ளி வச்சிருக்காராம். அதுவும் பெரும் சண்டை என்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வச்சிருப்பதா கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க. அவருக்கு எல்லாமுமா இருந்த பெல்லானவரு, செல்வாக்கை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதா கூறி பல கோடி கரன்சியை கறந்தாரு. போலீஸ் பிடியில சிக்கி நூறு நாட்களை தாண்டி ஜெயில்ல இருந்தாராம். ஆனாலும் தலைவரை பற்றி வாயே திறக்கலையாம். வெளியே வந்த பிறகு வீட்டு பக்கமே வரக்கூடாதுன்னு தலைவர் கடும் எச்சரிக்கை விடுத்தாராம்.

ஆனா அதையும் தாண்டி இலைக்கட்சி தலைவரை போய் சந்திச்சி பெல்லானவரு ஆசி வாங்கியதாக கட்சிக்காரங்க பேசிக்கிறாங்க. ஜெயிலுக்கு போனதும் தலைவரை பற்றி வாய் திறக்கல. ஆனா வெளியே தெரியாமல் தலைவரை சந்திச்சிக்கிட்டிருக்காரு. சமீபத்துல நடந்த சுபநிழ்ச்சியில் கட்சிக்காரங்க வெளிப்படையாக பங்கேற்றாங்க. தலைவரு மட்டும் ரகசியமா சந்தித்துச்சி வாழ்த்து சொல்லிட்டு போனாரு. இதப்போல பட்டியல் பெருசா இருக்காம். இவங்கள்ல பெரும்பாலானோர் பினாமியா இருப்பதாவும் சொல்றாங்க. இதே நிலைதான் மாங்கனி புறநகர் மாவட்டத்திலும் நடக்குது. குளோசா இருந்த ரெண்டு ஒன்றிய செயலாளரை நிழலானவர் தள்ளி வச்சமாதிரி நடிக்கிறாராம். இந்த நடிப்பெல்லாம் ஒரு ரைடு வந்தா சரியாகிப்போகிடுமுன்னு இலைக்கட்சி தொண்டர்கள் அடிச்சி சொல்றாங்க….’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

six + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi