திருச்சி: திருச்சியில் 2021ல் காரை வழிமறித்து ரூ.3 கோடி வழிப்பறி செய்த வழக்கில் கைதான 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். ரவுடி சாமி ரவி, திலீப் குமார் உள்ளிட்ட 10பேரை விடுதலை செய்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படாததால் 10 பேரும் விடுதலை செய்யப்படுவதாக மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2021ல் சட்டமன்ற தேர்தலின்போது காரை வழிமறித்து ரூ.3கோடி வழிப்பறி செய்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.