திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே நூடுல்ஸ் சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நூடுல்ஸ் தொண்டையில் சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு மாணவி இறந்து இருக்கலாம் என மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர். அமேசான் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்தார்.