திருச்சி : திருச்சியில் மாணவியிடம் ஒப்பந்த ஊழியர் அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்தது என்.ஐ.டி.. மாணவியிடம் ஒப்பந்த ஊழியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் வருத்தமளிக்கிறது என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் என்.ஐ.டி. விளக்கம் அளித்துள்ளது.