திருச்சி: ஒன்றிய அரசு சமீபத்தில் மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. ஜாக் வழக்கறிஞர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருச்சி சிவில் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். இதில் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை சுரேஷ் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை இந்தியில் பெயர் மாற்றம் செய்து, மசோதா தாக்கல் செய்ததை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.