திருச்சி : திருச்சி NIT மாணவிகள் விடுதியில், மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் மாணவர்களிடம் தரக்குறைவாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் விடுதி கண்காணிப்பாளர்.ஒப்பந்த ஊழியர் மீது புகார் அளித்ததற்கு, நடவடிக்கை எடுக்காமல் விடுதி வார்டன் தரக்குறைவாக பேசுவதாக மாணவிகள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்திய நிலையில், விடுதி கண்காணிப்பாளர் மன்னிப்பு கோரியதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.