திருச்சி: திருச்சியில் இயங்கி வந்த பிரபல நகைக்கடை திடீரென மூடப்பட்டது. முன்னறிவிப்பின்றி மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகைக்காக முதலீடு செய்தவர்கள் கடை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சீட்டு கட்டினால் அதிக லாபம் கிடைக்கும் என ஏமாற்றியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.