திருச்சி : திருச்சி என்.ஐ.டியில் பாதுகாப்பு குறைபாடு உறுதி என ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “காவல் மற்றும் வருவாய்த் துறையினர் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்துள்ளனர்; பெண்கள் விடுதிக்குள் ஆண் பணியாளர்களை அனுமதித்ததில் இருந்தே பாதுகாப்பு குறைபாடு உறுதியாகிறது. வார்டன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து என்.ஐ.டி. நிர்வாகம் முடிவெடுக்கும்.பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெண்கள் விடுதியில் ஆண்கள் பணியில் ஈடுபடும்போது விடுதி வார்டன் அருகே இருக்க வேண்டும் : திருச்சி ஆட்சியர்
previous post