திருச்சி: திருச்சியில் பைக்கில் வாணவெடிகளை வைத்து வெடிக்க செய்து வீலிங் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சமயபுரம் அருகே கடந்த 9ஆம் தேதி பைக் வீலிங் செய்த வீடியோ வைரலான நிலையில் இளைஞர் அஜய் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் அஜய் கைது செய்யப்பட்ட நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டனை காவல்துறையினர் தேடுகின்றனர்.