திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஏர் ஏசியா விமானம் நேற்றுமுன்தினம் வந்தது. இதில் வந்து இறங்கிய பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு அதிகாரிகள் ேசாதனை செய்தனர். அப்போது ஒரு பயணி, 24 மற்றும் 22 கேரட் தரத்திலான செயின், பிரேஸ்லெட், வளையல், மோதிரம் என 2 கிலோ 291 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1.53 கோடி. இது தொடர்பாக அந்த பயணியிடம், நகைகள் யாருக்காக கடத்தி வரப்பட்டது, இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.1.53 கோடி தங்கம் பறிமுதல்
previous post