திருச்சி, நவ.7: திருச்சி கிராப்பட்டி அரசு விடுதி மாணவர்கள், விடுதியில் தரமற்ற உணவு பரிமாறப்படுவதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக இந்திய மாணவர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் உட்பட 15 மாணவர்கள் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர். திருச்சி கிராப்பட்டியில் உள்ளது கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதி. இங்கு தரமற்ற உணவு பரிமாறப்படுவதாக புகார் தெரிவித்த மாணவர்கள் நேற்று முன்தினம் காலை கிராப்பட்டி மேம்பாலத்தில் இட்லி குண்டானுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத தொடர்பாக எ.புதுார் போலீசார் மறியலுக்கு தலைமை வகித்த இந்தி மாணவர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் மோகன் உட்பட 15 மாணவர்கள் மீது நேற்று வழக்கு பதிவு செய்தனர்.