திருச்சி: திருச்சியில், பைக்கில் வீலிங் செய்து கொண்டே பட்டாசு வெடித்த இளைஞர்களை போலீசார் கண்டறிந்தனர். பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என கண்டுபிடிக்கப்பட்டது. வீடியோ எடுத்தது, திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய் என போலீசார் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவித்துள்ளார். பைக்கின் முன்பு வான வேடிக்கை பட்டாசுகளை கட்டிக்கொண்டு, மக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்ததால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.