திருச்சி: திருச்சி என்ஐடி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார். மாணவிகளின் கோரிக்கைகள் குறித்து தனியாக விசாரிக்க பெண் காவலர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பெண் காவலர்கள் முழுமையாக கேட்டு அறிவார்கள். என்ஐடியில் பாலியல் குற்றச்சாட்டுகள் ஏற்கனவே நடந்துள்ளதாக எழுத்துப்பூர்வ புகார் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.