திருச்சி: திருச்சி கீழகல்கண்டார்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (33) மற்றும் தனது தாயார் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கும்பகோணத்தில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று விட்டு பின்னர் கும்பகோணத்தில் இருந்து செங்கோட்டை செல்லும் விரைவு ரயிலில் ஏறி மஞ்சத்திடல் ரயில் நிறுத்தத்தில் இறங்கினர்.
அப்போது தான் தெரியவந்தது ரயிலிலேயே 11 பவுன் நகை மற்றும் கொலுசை தவறவிட்டது தெரியவந்ததையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மணப்பாறை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடனடியாக ரயில் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ரயிலில் ஏறிச் சென்ற முதல் நிலை காவலர் சாந்தி அங்கு மணிகண்டன் குடும்பத்தினர் தவறவிட்டிருந்த நகை மற்றும் கொலுசை பத்திரமாக மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.