திருச்சி, நவ.6: திருச்சியில் கள்ளச்சந்தையில் மதுபானம், கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருச்சி மாநகரில் கஞ்சா லாட்டரி, மதுபானம் ஆகியவை திருட்டுத்தனமாக விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் உத்தரவிட்டதின் பேரில் அந்தந்த போலீஸ் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் எடமலைப்பட்டி புதூர், ஏர்போர்ட் பகுதிகளில் கஞ்சா விற்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல் காந்தி மார்க்கெட் பகுதியில் லாட்டரி விற்றதாக ஒருவரை கைது செய்தனர். தில்லைநகர் பகுதியில் மதுபானம் விற்றதாக ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மாநகரப்பகுதியில் கள்ளச்சந்தையில் கஞ்சா, மதுபானம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.