சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலை. மாணவர்களுக்கு உடனடியாக தற்காலிக பட்டச் சான்று வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பல்கலை.யின் அலட்சியத்தால் வேலை, உயர்கல்வியில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு. இளநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்த 1.5 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இன்னும் தற்காலிக பட்டச் சான்று வழங்கவில்லை. மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாரதிதாசன் பல்கலை. அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.