திருச்சியிலுள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலையில் கிராஜூவேட், டெக்னீசியன், இன்ஜினியரிங் அல்லாத அப்ரன்டிஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
பயிற்சிகள்:
1. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: உதவித் தொகை- மாதம் ரூ.9 ஆயிரம். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பாடங்களில் பி.இ.,/பி.டெக்., பட்டம்.
2. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: உதவித் தொகை- மாதம் ரூ.8 ஆயிரம். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/சிவில்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடங்களில் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.
3. இன்ஜினியரிங் அல்லாத அப்ரன்டிஸ்: உதவித் தொகை மாதம் ரூ. 9 ஆயிரம். தகுதி: இயற்பியல்/வேதியியல்/ கணிதம்/வரலாறு/கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்/ஆங்கிலம்/பொருளியல்/வணிகவியல்/வணிக நிர்வாகம்/புள்ளியியல்/பயோ-டெக்னாலஜி
வயது: அனைத்து பயிற்சிகளுக்கும் 14.06.2025 அன்று குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பி.இ.,/டிப்ளமோ/பி.ஏ.,/பி.எஸ்சி.,/பி.காம்., உள்ளிட்ட படிப்புகளில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
www.nats.education.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.06.2025.