திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரின் உடைமையில் சோதனையிட்டபோது தங்க பசையில் நனைத்த 7 லுங்கிகள் சிக்கின. துபாயில் இருந்து திருச்சி வந்த பயணியின் உடைமையை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். லுங்கியின் நிறம் மாறியிருந்ததை கண்டு அதிகாரிகள் சோதனையிட்டபோது தங்க பசையில் நனைக்கப்பட்டிருந்தது அம்பலமானது. 7 லுங்கிகளில் இருந்து ரூ.16.64 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை பிரித்தெடுத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.