சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைத்து அரசாணை வெளியிடப்படுகிறது. அதேபோல, நலவாரியத்தில் பழங்குடியின மக்களை உறுப்பினர்களாக சேர்த்து வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உதவித் தொகை வழங்குவதற்கும், பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.