Thursday, February 29, 2024
Home » மரக்காணத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின: வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை

மரக்காணத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கின: வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாக விவசாயிகள் வேதனை

by Nithya

விழுப்புரம்: தமிழகத்தில் பருவம் மாறி பெய்யும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முளைக்க தொடங்கி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மரக்காணம் பகுதியில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நடவு செய்யப்பட்டுள்ள நாற்றுகள் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயமே பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருவெண்ணைநல்லூர் அருகே மெய்யாத்தூரை சுற்றியுள்ள 300 கிராமங்களில் சுமார் 900 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் மழை பெய்து பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றன. வடிகால் வசதியின்றி வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி விவசாயிகள் நெற்பயிர்கள் முளைக்க தொடங்கிவிட்டதாக தெரிவித்தனர். ஏக்கருக்கு 40,000 ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தும் வீணாகிவிட்டதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

சீர்காழி மற்றும் விளந்திடசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் இடைவிடாது கொட்டிய கனமழையால் விளைநிலங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் முளைத்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டதாக தெரிவித்த விவசாயிகள் இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi