Sunday, February 25, 2024
Home » பொருளாளர் நியமன விவகாரம் மாவட்ட செயலாளரை மிரட்டும் நிர்வாகிகள்

பொருளாளர் நியமன விவகாரம் மாவட்ட செயலாளரை மிரட்டும் நிர்வாகிகள்

by Arun Kumar

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவி 2 ஆண்டுக்கும் மேல் காலியாக இருந்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் முன்னாள் துணை மேயர் சீனிவாசனை, மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதேபோல் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் பொருளாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு இப்ராகிம்ஷா என்பவரை நியமிக்க சீனிவாசன் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இப்ராகிம்ஷாவுக்கு கட்சியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் இப்ராகிம்ஷாவின் சகோதரர் ஒரு குற்ற வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ளார். இதை ஆதாரத்துடன் திருச்சி மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணியிடம், சிலர் புகாராக தெரிவித்துள்ளனர். இதுபற்றி பற்றி தங்கமணி, மாவட்ட செயலாளர் சீனிவாசனிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவில் பொறுப்பில் உள்ள சில பகுதி செயலாளர்கள் உள்பட 6க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், பொருளாளர் நியமன விவகாரம் தொடர்பாக பேசுவதற்காக இரவு 9 மணியளவில் திருச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு மாவட்ட செயலாளரை அழைத்துள்ளனர்.

மாவட்ட செயலாளர் ஆன பின் இரவு 10 மணிக்கு மேல் நான் வெளியில் வருவதில்லை என சீனிவாசன் கூறியுள்ளார். இப்போது வராவிட்டால் விவகாரத்தை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கொண்டு செல்வோம் என செல்போனில் மிரட்டும் விதமாக பேசி உள்ளனர்.இதனால் வேறு வழியின்றி அவர்கள் அழைத்த ஓட்டலுக்கு சீனிவாசன் சென்றுள்ளார். அங்கு இரவு 11.30 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சீனிவாசன் வந்ததாக கூறப்படுகிறது.இதுபற்றி சீனிவாசனிடம் கேட்ட போது, ‘‘ஓட்டலில் நடந்தது வட்ட செயலாளர் கூட்டம். என்னை யாரும் மிரட்டவில்லை. அனைத்து நிர்வாகிகளும் என்னுடன் பாசத்துடன் பழகி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தான் பொருளாளர் நியமிக்கப்படுவார்’’ என்றார்.

You may also like

Leave a Comment

2 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi