Wednesday, February 28, 2024
Home » போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தல்

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தல்

by Arun Kumar

சென்னை: சென்னை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும்: தமிழ்நாடு போக்குவரத்து துறை வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துவதாக அமையும். அனைத்து பணியாளர்களும் பணி விடுப்பு, மாற்று விடுப்பு, ஈட்டிய விடுப்புகளை தவிர்த்து பணிக்கு வர வேண்டுகோள் விடுத்துள்ளனர். அனைத்து விடுப்புகளையும் தவிர்த்து பணிக்கு ஆஜராகி சீரான பேருந்து போக்குவரத்து நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டுகோள் விடுத்துள்ளது.

சேம, தினக்கூலி பணியாளர்கள் கட்டாயமாக பணிக்கு வர வேண்டும் எனவும் உத்தரவு. வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் வேலை நிறுத்தம் அறிவித்தது. சென்னை தேனாம்பேட்டையில், போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினருடன், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத்துறை நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி வரும் 9ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்களை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதில் தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்க்கப்படாத காரணத்தால் பேச்சுவாரத்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனையடுத்து வருகிற 9ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபட் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொழிலாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பால் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்க முடியாமல் பாதிக்கப்படக்கூடிய நிலை உருவானது

இதனையடுத்து தமிழக அமைச்சர் சிவசங்கர் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். கோரிக்கைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். இருந்த போதும் வேலை நிறுத்தப்போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்து போக்குவரத்து துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

 

You may also like

Leave a Comment

seventeen − 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi