தர்மபுரி, நவ.7: தர்மபுரி மாவட்டம், கடமடை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் சாந்தியிடம் ஒரு மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:பாலக்கோடு அருகே, கடமடை கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.எங்களது விவசாய நிலங்கள், தர்மபுரி -ஓசூர் 4 வழிச்சாலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், கையகப்படுத்திய நிலத்தில் அணுகுசாலை அமைக்கப்படாமல், மரங்கள் நட்டு மண் சாலையாக உள்ளது. இதனால், எங்கள் விவசாய நிலத்திற்கு அந்த வழியாக டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அணுகுசாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.