காஞ்சிபுரம்: மாற்றம் சமூக அமைப்பை உருவாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக டிராக்டர்களை வழங்கி வரும் திரைப்பட நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் காஞ்சிபுரம் அருகே விவசாயி ஒருவருக்கு டிராக்டர் வழங்கி உதவியுள்ளார். மாற்றம் என்ற சமூக அமைப்பினை உருவாக்கி கடந்த சில மாதங்களாக 10க்கும் மேற்பட்ட விவசாய டிராக்டர்களை திரைப்பட நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த முனுசாமிக்கு மாற்றம் அமைப்பு மூலம் எஸ்.ஜே. சூர்யா தனது சொந்த செலவில் வாங்கியுள்ள டிராக்டரை வழங்கினார். விவசாயி முனுசாமியிடம் டிராக்டர் சாவியை அளித்த ராகவா லாரன்ஸ் 10 நாட்கள் தங்கள் பணிகளை மேற்கொன்டுவிட்டு மீதமுள்ள 20 நாட்களில் ஏழை எளிய விவசாயிகளுக்கு டிராக்டரை வழங்கி உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.