Saturday, February 24, 2024
Home » திருமங்கலத்தில் ஆசீர்வாதம் செய்வதாக மடக்கி பைக்கில் சென்ற ஐடி ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் பறித்த திருநங்கைகள்: ‘பணத்தை வாங்குவது ரொம்ப கஷ்டம்’ அறிவுரையோடு அனுப்பியது போலீஸ்

திருமங்கலத்தில் ஆசீர்வாதம் செய்வதாக மடக்கி பைக்கில் சென்ற ஐடி ஊழியரிடம் ரூ.5 ஆயிரம் பறித்த திருநங்கைகள்: ‘பணத்தை வாங்குவது ரொம்ப கஷ்டம்’ அறிவுரையோடு அனுப்பியது போலீஸ்

by Ranjith

அண்ணா நகர்: திருமங்கலம் பகுதியில் பைக்கில் சென்ற ஐடி நிறுவன ஊழியரை மடக்கி, ஆசீர்வாதம் செய்வதாக கூறி ரூ.5 ஆயிரத்தை திருநங்கைகள் வழிப்பறி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் டிப்-டாப்பாக பைக்கில் வரும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை வழிமடக்கி ஆசீர்வாதம் செய்வதாக கூறி திருநங்கைகள் பணம் பறித்து செல்வதாகவும், அதேபோல் தனியாக செல்பவர்களை வழிப்பறி கொள்ளையர்கள் வழிமடக்கி பணம் மற்றும் செல்போன் பறித்து செல்வதாகவும் திருமங்கலம் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், ஐடி ஊழியர் ஒருவரை மடக்கி திருநங்கைகள் பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் சுனில் (41), இவர், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலை முடித்து விட்டு திருமங்கலம் வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திருநங்கைகள் திடீரென வழிமடக்கி ஆசீர்வாதம் செய்துள்ளனர். உடனே, சுனில் அவரது மணிபர்சில் இருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்த போது பர்சில் நிறைய பணம் இருப்பதை கண்ட திருநங்கைகள் அந்த பணத்தை பிடுங்கி, ‘நீங்க நல்லா இருப்பீங்க சார்..’ என்று மீண்டும் ஆசீர்வாதம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதனால், பணத்தை பறிகொடுத்த சுனில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தால் போலீசார் என்ன சொல்வார்களோ, இந்த புகாரை எடுப்பார்களா, மாட்டார்களா என மனக்குழப்பத்திலேயே திருமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது போலீசார், ‘‘திருநங்கைகளிடம் பணத்தை பறிகொடுத்தால் திரும்ப வாங்குவதற்கு மிக கடினம்.

நீங்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறியுள்ளனர். பிறகு வழக்கு பதிவு செய்து பத்திரமாக வீட்டிற்கு போங்க சார் என்று வழி அனுப்பி வைத்துள்ளனர். பறிபோன பணம் திரும்ப கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் புகார் கொடுக்க சென்ற ஐடி ஊழியரை போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்த சம்பவம் அவருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

fourteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi