சென்னை: 37 துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. நான் முதல்வன் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு திட்டங்களை கையாளும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக திட்ட மேலாளராக, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியராக இருந்த பவித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதல்முறையாக இப்பொறுப்புக்கு துணை ஆட்சியர் நிலை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.