சென்னை: தமிழகம் முழுவதும் 50 துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவு: செங்கல்பட்டு மாவட்டம், வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமார், தென்காசி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளராகவும், சோழிங்கநல்லூர், குடிமை பொருள் வழங்கல் உதவி ஆணையர் கவிதா, கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு உதவி ஆணையராகவும், தென்காசி மாவட்டம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் சிவஜோதி, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எஸ்.என்.ஜே.புரூவரிஸ், மூசிவாக்கம் (ம) கோலம்பாக்கம்,
கலால் மேற்பார்வை அலுவலராகவும், ராணிப்பேட்டை, வருவாய் வட்டாட்சியர் வினோத்குமார், காஞ்சிபுரம் (பொது) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கள்ளக்குறிச்சி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கிண்டி, தமிழ்நாடு திறன், மேம்பாட்டு கழகம், திட்டமேலாளராகவும், திருவண்ணாமலை (சமூக பாதுகாப்பு திட்டம்) முன்னாள் தனித்துறை ஆட்சியர் வெங்கடேசன், சென்னை, திநகர் மண்டலம் (குடிமை பொருள் வழங்கல்) உதவி ஆணையராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திருவள்ளூர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், முன்னாள் மண்டல மேலாளர் சேகர், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், கள்ளபிரான்புரம், எஸ்.என்.ஜே.வடிப்பகம், கலால் மேற்பார்வையாளராகவும், சென்னை, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனம், மேலாளர் இளவரசன், சென்னை, தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மாவட்ட மேலாளராகவும், சென்னை, மெட்ரோ ரயில் நிறுவனம் (நிலஎடுப்பு) சொருபராணி, ஈரோடு மாவட்டம், சக்தி சர்க்கரை ஆலை நிறுவனம், வடிப்பக அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதைப்போன்று சென்னை, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கழக நிறுவனம் துணை ஆட்சியர் காஜா சாகுல் ஹமீது, விழுப்புரம், வருவாய் கோட்டாட்சியராகவும், சென்னை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மேலாளர் மனோன்மணி, ராணிப்பேட்டை, வருவாய் கோட்டாட்சியராகவும், சென்னை, சிப்காட் தனித்துணை ஆட்சியர் (நிலஎடுப்பு) பரிமளா தேவி, செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியராகவும், செங்கல்பட்டு மாவட்டம், வேதநாராயணபுரம், அச்சரப்பாக்கம் வடிப்பக அலுவலராக ஆர்.எம்.இப்ராஹிம், சென்னை, தண்டையார் பேட்டை வருவாய் கோட்டாட்சியராக என தமிழ்நாடு முழுவதும் 50 துணை ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது.