மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள கடை வியாபாரிகளுக்கான பயிற்சி முகாம் மதுராந்தகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் அனுராதா தலைமை தாங்கினார். உணவு பயிற்சியாளர் சத்தியநாராயணன், வியாபாரிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், மதுராந்தகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் டீக்கடை, உணவகம், இனிப்பகம், இறைச்சி கடை உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்பு துறை சார்பில், உணவு தயாரிக்கின்ற முறையில் பார்வையாளர் ஒருவர் இருக்க வேண்டும், அந்த மேற்பாரவையாளர் முறையாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர் பயிற்சி முடித்த பின் சான்றிதழ் பெற்று தொழில் மற்றும் உணவு தர கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற பயனுள்ளதாக இருக்கும்.
அதிகாரிகள் ஆய்வின்போது பயிற்சி பெற்ற சான்றிதழ் கடையில் வைத்திருக்க வேண்டும். மேலும் கடை உரிமை சான்றிதழ் மற்றும் உணவு தர கட்டுப்பாடு சான்றிதழ் விண்ணப்பிக்கும்போது அல்லது புதுப்பிக்கும்போது மேற்பார்வையாளர் பயிற்சி பெற்ற சான்றிதழ் சேர்த்து இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உணவு பாதுகாப்பு தர சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது, புதுப்பிப்பது குறித்தும் விளக்கப்பட்டது. முகாமில், வணிகர் சங்க நிர்வாகி பிரபாகரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.