குனோ: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெலகாவி ஏவியேஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் என்டர்பிரைசஸில் இருந்து செஸ்னா-152 ரக பயிற்சி விமானம் சோதனை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மத்தியபிரதேசம் குனோவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
பமுது பார்க்கும் பணிகளுக்கு பிறகு நேற்று மதியம் குனோ விமான நிலையத்தில் 40 நிமிடங்கள் வானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது திடீரென்று விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானிகள் இருவரும் காயமடைந்தனர்.