கொல்கத்தா: பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் நீதிகேட்டு நடைபெறும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஹவுராவில் நூற்றுக்கணக்கனோர் வீதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்தனர்.