திருப்பூர்: திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் ரயில் தண்டவாளத்தில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் இளம்பெண் ஒருவர் சிறுவனுடன் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று இருவரது உடலையும் கைப்பற்றி விசாரித்தனர். இதில், இறந்தவர்கள் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகாவை சேர்ந்த ஐயப்பன் மனைவி விஜயலட்சுமி (26), அவரது மகன் யாதேஸ்வரன் (4) ஆகியோர் என்பதும், குடும்ப பிரச்னையால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
ரயில் முன் பாய்ந்து 4வயது மகனுடன் இளம்பெண் தற்கொலை
0
previous post