பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த அனுப்பப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளம் அருகில் கால் துண்டித்த நிலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரிடம் கேட்டபோது, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிஷ்(30) இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, முதலுதவி சிகிச்சை கொடுத்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.