சென்னை: விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில் 237 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விரைவு ரயிலில் செங்கல்பட்டு ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியபோது தங்கம் பிடிபட்டது. தங்கத்தை கடத்திச் சென்ற சென்னையைச் சேர்ந்த அமித்(44), ராமலால்(44) ஆகியோரை கைது செய்யப்பட்டனர்.