மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆன்மிக சுற்றுலா ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து ஐஆர்சிடிசி நிறுவனத்தை சேர்ந்த சமையலர் உட்பட 5 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
ரயில் பெட்டி, பயணிகளை முறையாக கண்காணிக்க தவறிய ரயில்வே அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், விதிகளை மீறி சட்டவிரோதமாக எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை ரயில் பெட்டிக்குள் கொண்டு வரும்போது தடுத்து நிறுத்த தவறிய அதிகாரிகள், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.